Wednesday, December 24, 2008
எந்திரன் படப்பிடிப்புக்கு மோட்டார் சைக்கிளில் சென்ற ரஜினி
சென்னையையடுத்த மீஞ்சூரில் கடந்த மூன்று தினங்களாக எந்திரன் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கிறது. நேற்று மாலை 4 மணிக்கு தனது வீட்டிலிருந்து படப்பிடிப்புக்கு கிளம்பினார் ரஜினி. மணலி அருகே சென்று கொண்டிருந்தபோது கடுமையான டிராபிக்ஜாம் ஏற்பட்டு ரஜினியின் கார் சிக்கிக் கொண்டது.
படப்பிடி்பபுக்கு தாமதமானதால் என்னசெய்வதென்று யோசித்த ரஜினி, அந்த வழியாக வந்த போக்குவரத்து போலீஸிடம் லிப்ட் கேட்டார். சூப்பர் ஸ்டாரை வைத்து பைக் சவாரிபோக யாருக்குத்தான் ஆசை வராது? போலீஸ்காரரும் 'நீங்கள் எனது பைக்கில் வர நான் கொடுத்துவைத்திருக்க வேண்டும்' என்றபடி ரஜினியை தனது பைக்கில் ஏற்றிக்கொண்டார்.
அடையாளம் தெரியாமல் இருப்பதற்காக போலீஸ்காரரின் மழை கோட்டையும், ஹெல்மெட்டையும் வாங்கி ரஜினிகாந்த் அணிந்து கொண்டார். பின்னர் மோட்டார் சைக்கிளில் பின்னால் ஏறி அமர்ந்தார். போலீஸ்காரர் மோட்டார் சைக்கிளை ஓட்டினார்.
ரஜினிகாந்த் ஒரு போலீஸ் காரரின் மோட்டார் சைக்கிளில் படப்பிடிப்புக்கு வருவதை அவருடைய உதவியாளர் செல்போன் மூலம் இயக்குனர்ஷங்கருக்கு தெரிவித்தார்.
ரஜினிகாந்த் சுமார் 20 கிலோ மீட்டர் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்து படப்பிடிப்பு தளத்தை அடைந்தார். அவர் மோட்டார் சைக்கிளில் வந்து இறங்கியதைப் பார்த்து இயக்குனர் ஷங்கர் உள்பட படப்பிடிப்பு குழுவினர் அனைவரும் ஆச்சரியப்பட்டார்கள்.
ரஜினிகாந்த் அணிந்திருந்த மழை கோட்டையும், ஹெல்மெட்டையும் கழற்றி கொடுத்துவிட்டு, போலீஸ்காரருக்கு நன்றி தெரிவித்தார். உங்கள் உதவியை மறக்க மாட்டேன் என்றார். உங்களை என் மோட்டார் சைக்கிளில் அழைத்து வந்ததில் எனக்கு சந்தோஷம் என்று போலீஸ்காரர் கூறினார். அவரிடம் விடைபெற்றுக்கொண்ட ரஜினி படப்பிடிப்பு தளத்துக்குள் நுழைந்தார்.
Nandri: Cinesouth
Monday, December 15, 2008
பொம்மலாட்டம் - விமர்சனம்
'மந்தையிலே நின்னாலும் வீரபாண்டி தேரு' என்பதை மற்றுமொருமுறை நிருபித்திருக்கிறார் பாரதிராஜா. காதலின் தீராத பக்கங்களில் செலுலாய்டு கவிதை எழுதி வந்தவர், இந்த முறை தொட்டிருப்பது மிரள வைக்கும் த்ரில்லரை!
சினிமாவுக்குள் சினிமா. இதே டைப் கதைகளை எக்கச்சக்கமாக பார்த்திருக்கும் தமிழ்சினிமாவுக்கு புதுசாக ஒரு பொம்மலாட்டம் காட்டியிருக்கிறார் ராஜா.
பிரபல இயக்குனரான நானா படேகர் மீது மூன்று கொலைப்பழிகள். தனது படத்தின் கதாநாயகியான ருக்மணியை காரோடு மலையுச்சியில் இருந்து கீழே தள்ளி கொலை செய்தார் என்பது அவற்றில் ஒன்று. விசாரணை அதிகாரியாக வருகிறார் அர்ஜுன். 'ஷாட், கட்' என்று சொல்வதை கூட 'ஷூட், கட்' என்பார் போலிருக்கிறது நானா படேகர். அப்படி ஒரு கோபக்கார இயக்குனரான இவர் சி.பி.ஐ கஸ்டடியில். தம்மடித்துக் கொண்டே பதில் சொல்கிற படேகரின் திமிர், கலைஞனுக்கேயுரிய கர்வம். மேற்படி கொலைகளை யார் செய்திருப்பார்கள் என்ற தீப்பொறி கேள்வியோடு வேக வேகமாக நகர்கிறது படம். முடிவு? யூகிக்கவே முடியாத அதிர்ச்சி!
ஒரு சின்ன பார்வையிலேயே தான் எம்மாம் பெரிய நடிகர் என்பதை புரிய வைத்துவிடுகிறார் நானா படேகர். ஸாரி, நானா 'பலே'கர்! தனது கட்டைவிரல் தோஸ்திடம் கேள்வி கேட்டு முடிவெடுக்கும் இவரது ஸ்டைல் பயங்கரம்! ஷ§ட்டிங் ஸ்பாட்டுக்கே வந்து அவமானப்படுத்தும் மனைவியை பொறுத்துக் கொண்டு நடிப்பு சொல்லிக் கொடுக்கிறாரே, அந்த காட்சி ஒன்று போதும்... நானா படேகரின் வலிமையை சொல்ல! சர்வ அலட்சியமும் பொருந்திய மகா கலைஞனாக திரையில் உலவியிருக்கிறது இந்த வட நாட்டு புயல்!
ஆக்ஷன் கிங், இந்த படத்தில் நம்பியிருப்பது புஜத்தையல்ல, நடிப்பென்ற நிஜத்தை! இந்தியாவே மதிக்கக் கூடிய ஒரு இயக்குனரை, தனது விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்த பின்பும், அவரை மரியாதையாக நடத்துவது, கொலையாளி இவர்தான் என்று நிரூபிக்க முடியாமல் போன பின்பும், அந்த கொலை கேஸை அதோடு விட்டு விடாமல், வேர் வரைக்கும் தேடிப் போவது என்று புது ‘ரன்னிங்’ அர்ஜுனிடம். காஜல் அகர்வாலுக்கும் இவருக்குமான காதல், கதையோட்டத்தில் ஒரு துரும்பை கூட கிள்ளிப் போடவில்லை என்பது சப்!
ராஜா அறிமுகப்படுத்தியிருக்கும் ‘ஆர்’ வரிசை ஹீரோயின்களில், ருக்மணி நிற்பது ‘ஜோர்’ வரிசையில்! இறுதி காட்சிகளில் இதுவரை பார்த்த ருக்மணிதானா? என்று பிரமிக்க வைக்கிறார். பேச வேண்டிய அத்தனை வார்த்தைகளையும் இவரது கண்களே பேசி விடுவது ஆச்சர்யம்!
ஊர் பெரியவர் மணிவண்ணனின் இம்சைகளும், இச்சைகளும் கொஞ்சம் கலகலப்பு. கொஞ்சம் அலு அலுப்பு! கிராமத்தில் ஒரு கூட்டமே உட்கார்ந்து கிசுகிசுவை படித்து சீரியஸாக டிஸ்கஸ் பண்ணுவது சிரிப்பை வரவழைக்கிறது. “ஜெயம் ரவிக்கும் பரவை முனியம்மாவுக்கும் காதலா? ரொம்ப பேட் டேஸ்டா இருக்கே” என்று விவேக் கூறும்போது தில்லானா ஆடுகிறது தியேட்டர்.
“பிரகாஷ்ராஜுக்கு பதிலா வேற நடிகரை பாரு. அவரு ஒரே பேமென்ட்டா கேட்கிறாராம்”. “கிழவனை பார்றா, ஹீரோயினை பிராக்கெட் பண்ண அலையுறான்” இப்படி படத்தில் வரும் வசனங்கள் நிஜத்தை பிரதிபலிக்கும் நிலைக்கண்ணாடி.
ஹிமேஷ் ரேஷ்மையாவின் பாடல்களில் டோலா டோலாவை கேட்டுக் கொண்டேயிருக்கலாம். பின்னணி இசையை வேறொருவர் கவனித்திருக்கிறார். (இளையராஜா போல் வருமா?) பி.கண்ணனின் ஒளிப்பதிவில் இருவேறு பகுதிகள். பிளாஷ்பேக்குகளுக்கு இவர் கொடுத்திருக்கும் தனி கலர் கவனிக்கத்தக்கது. வெள்ளை நிற தேவதைகளுக்கு விடுதலை கொடுத்துவிட்டாலும், சூப்பர் இம்போஸ் விஷயத்தில் அப்படியே இருக்கிறார் இயக்குனர் இமயம். சில எடிட்டிங் யுக்திகளும் அப்படியே!
என்றாலும், இக்கால இயக்குனர்கள் முன் முஷ்டியை உயர்த்தி, குஸ்தியிலும் ஜெயித்திருக்கிறார் பாரதிராஜா.
Thanks: tamilcinema.com
Saturday, December 13, 2008
அறிமுக ஹீரோவின் அலம்பல்!
பொதுவாக கதையில் வரும் கேரக்டரின் பெயரை தலைப்பாக வைப்பார்கள். இந்த படத்தில் நடிக்கும் புதுமுகத்தின் பெயர் சிவகிரி. இதையே டைட்டிலாக வைத்திருக்கிறார்கள்.
முதல் படத்திலேயே ஆக்ஷன் ஹீரோ அவதாரம் எடுத்திருக்கிறார் இந்த சிவகிரி. நாட்டுக்குள் ஊடுருவும் தீவிரவாதிகளை அழிக்க இவர் என்னவெல்லாம் முயற்சிகள் எடுக்கிறார் என்பதை விறுவிறுப்பாக சொல்கிறாராம் புதுமுக இயக்குனர் ஷிவாஜி. டிஷ்யூம் படத்தில் பொறி பறக்க ஆக்ஷன் காட்சிகளை அமைத்த டிஷ்யூம் சக்திவர்மாவை தேடிப்பிடித்து ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள்.
முதல் கட்ட படப்பிடிப்பு மலேசியா, சிங்கப்பூரில் நடந்து வருகிறது. (தீவிரவாதிகள் அங்கிருந்துதான் இந்தியாவுக்குள் ஊடுருவுவார்களோ?) சிவகிரிக்கு மூன்று ஹீரோயின்கள். மூவருக்கும் தலா ஒரு டூயட் இருக்குமா தெரியாது. ஆனால், அறிமுகப்படத்திலேயே மூணு ஹீரோயின், அசத்து மாப்ளே அசத்து என்கிறார்களாம் சிவகிரியின் நண்பர்கள்!
Nandri: Tamilcinema
Thursday, December 11, 2008
டிசம்பர் 15: வில்லு படத்தின் இசை வெளியீடு
அய்ங்கரன் இண்டர்நேஷனல் தயாரிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு இறுதிக் கட்டத்தை நெருங்கிவிட்டது. இன்னும் ஆரம்ப பாடல் மட்டும்தான் பாக்கியாம்.
இதற்கான படப்பிடிப்பு சென்னை பின்னி மில்லில் நேற்று துவங்கியது. சில தினங்களில் இந்தப் பாடல் காட்சி முடிந்துவிடும்.
பொங்கல் வெளியீடான வில்லு படத்தின் பாடல்கள் வரும் 15-ம் தேதி வெளியிடப்படுகின்றன. இதற்காக சென்னையில் மிகப் பெரிய விழாவுக்கு ஐங்கரன் நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது. தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.
விஜய்யின் ஜோடியாக நயனதாரா நடிக்கிறார். நெப்போலியன் மற்றும் பிரகாஷ் ராஜ் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
Thanks: thatstamil.com
Wednesday, December 10, 2008
தெலுங்கு தேசம் கட்சியில் இணைந்த நடிகை கவிதா!
நடிகை கவிதா தெலுங்கு தேசம் கட்சியில் இணைந்துள்ளார். அவருக்கு மாநில அளவில் கட்சிப் பொறுப்பு தரப்படுகிறது.
ஏராளமான தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடப் படங்களில் கவிதா. இப்போதும் அக்கா, அண்ணி, அம்மா வேடங்களில் நிறைய படங்களில் வருகிறார்.
நேற்று திடீரென்று இவர் ஐதராபாத்தில் உள்ள தெலுங்கு தேசம் கட்சி அலுவலகம் சென்றார். அங்கு கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு தலைமையில் தன்னை தெலுங்கு தேசத்தில் இணைத்துக் கொள்வதாக அறிவித்தார்.
பின்னர் நிருபர்களிடம் கூறுகையில், எனக்கு மறைந்த அண்ணாகாரு என்டிஆரை நன்கு தெரியும். கட்சி தொடங்கிய உடனே என்னத்தான் முதலில் சேருமாறு அழைத்தார். அன்றைக்கு தெலுங்கில் நான் முன்னணி நடிகை. ஆனால் சின்ன வயசு என்பதால் இப்போது வேண்டாமே என்று கூறினேன். அவரும் ஏற்றுக் கொண்டு, பின்னர் சேரும்படி கூறியிருந்தார்.
அதை இத்தனை ஆண்டுகள் கழித்துதான் நிறைவேற்றியுள்ளேன்... இனி கட்சியின் வளர்ச்சிக்காக என் பாப்புலாரிட்டியைப் பயன்படுத்தப் போகிறேன், என்றார்.
கவிதா கட்சியில் இணைந்ததை மகளிர் அணித் தலைவி ரோஜா வரவேற்றுள்ளார். கவிதாவுக்கு மாநில அளவில் புதிய பொறுப்பு தர சந்திரபாபு நாயுடு முடிவெடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
Thanks: thatstamil.com
சசியின் பூ... குறிஞ்சிப் ‘பூ‘.
மாரிக்கு சின்ன வயது முதல் மாமன் தங்கராசு மீது ப்ரியம். வளர்ந்து மாமனை கட்டிக்கப் போறேன் என்று வாத்தியார்முன் சொல்லும் அளவுக்கு காதல். இன்ஜினியரிங் படிக்கச் செல்லும் மாமன் சந்தர்ப்பவசத்தால் வேறொரு பெண்ணை திருமணம் செய்ய நேர்கிறது. திருமணம் ஆன பிறகு மாரியின் மாமன் மீதான காதல் என்னானது? நெஞ்சை பிழிய வைத்து ப்ரியாவிடை தருகிறார், சசி.
ஹீரோயின் ஓரியண்ட் கதையில் ஓரமாக நிற்க வேண்டிவரும் என்பது தெரிந்தே நடித்திருக்கிறார் ஸ்ரீகாந்த். மனைவி தன்னை திட்டுவது மாரிக்கு தெரிந்துவிடக் கூடாது என்று தவிக்கும் காட்சியில் கவனிக்க வைக்கிறார். கேமரா எதிர்பார்க்கும் குறைந்தபட்ச அழகியலையும் நிராகரிக்கும் விதமாக பல நடிகர்களை அறிமுகப்படுத்திய சசியை எத்தனை பாராட்டினாலும் தகும்.
மாரியின் அம்மா, அண்ணன், தோழி, பேனாக்காரர், டீக்கடை அலோ, சின்ன வயது மாரி... சின்னச்சின்ன கேரக்டர்களையும் சின்சியராக செதுக்கியிருக்கிறார்கள்.
கதையை சிதைக்காத அதே நேரம் கதையை உயர்ந்தபட்ச சாத்தியங்களுக்கு கொண்டு செல்கிறது கேமரா. செம்மண் பிராந்தியத்தை காட்டும் லாங் ஷாட்கள் அற்புதமானவை. ரெட்டை பனை மரங்களை மாரி சுற்றிவரும் முதல் காட்சியில் பிரவாகித்துவரும் இசை மனதை நிறைக்கிறது.
அவன் (தங்கராசு) உனக்கு இல்லைனு ஆனபிறகும் அதே பாசத்தோடு உன்னால எப்படி இருக்க முடியுது? மாரியின் தோழி கேட்கும் இந்த கேள்விக்கான விடையை காட்சிகளாக்கியிருப்பதுதான் பூ-வின் ஆதாரம். மாரியின் எதிர்பார்ப்பில்லாத காதலின்முன் அனைத்துமே சிறுத்துவிடுகிறது.;
தமிழில் வெளியாகும் அள்ளித் தெளித்த கோலங்களுக்கு நடுவே அழுத்தமாக கதை சொல்ல முயன்றிருக்கும் சசியின் பூ... குறிஞ்சிப் ‘பூ‘.
கமல் படத்தில் ஸ்ரேயா
தசாவதாரம் படத்துக்குப் பின் கமல் இயக்கி நடிக்கும் தலைவன் இருக்கின்றான் படத்தில் அவருக்கு ஜோடியாக ஸ்ரேயா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
இதுவரை இந்தப் படத்தில் அவருக்கு ஜோடி என கூறப்பட்டு வந்த த்ரிஷாவுக்கு மர்மயோகியில் மட்டும் வாய்ப்பளிக்கிறார் கமல்.
தசாவதாரம் படத்துக்கு பின் மர்ம யோகி எனும் படத்தை இயக்கி நடிப்பதாக கமல் அறிவித்தார். ஆனால் படத்தின் பட்ஜெட் மிக அதிகம் என்பதால் இன்றைய நிதி நெருக்கடியில் எடுப்பது சிரமம் என படத்தின் தயாரிப்பாளர் பிரமிட் சாமிநாதன் கூறிவிட்டதால், தற்காலிகமாக படத்தை ஒத்திப்போட்டார் கமல்.
இப்போது தலைவன் இருக்கின்றான் இருபட வேலைகளில் தீவிரமாக இறங்கியுள்ளார். இந்தப் படம் முடியும் முன்பே ஜனவரி அல்லது இன்னும் சில வாரங்களுக்குப் பிறகு மர்மயோகியையும் துவங்கும் திட்டமிருப்பதாகக் கூறப்படுகிறது.
ஆனாலும் தனது மர்மயோகிக்கு த்ரிஷாதான் நாயகி என்று உறுதி கூறியிருக்கிறாராம். மர்மயோகியில் ஸ்ரேயாவும் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. விக்ரம் ஜோடியாக இவர் நடித்த கந்தசாமி விரைவில் திரைக்கு வருகிறது.
இதைத் தவிர, ஜக்குபாய் படத்திலும் நடிக்கிறார் ஸ்ரேயா.
சுட சுட வந்த சிந்தூரி
இனி ரகசியா, தேஜாஸ்ரீக்களுக்கு வேலையில்லாமல் போகலாம்! இவர்களின் இடத்தை நிரப்ப ‘பெரிய மனசோடு’ வந்திருக்கிறார் சிந்தூரி. பாய்ஸ், தத்தி தாவுது மனசு என்று இவர் நடித்த படங்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். அப்படியே தெலுங்கு பக்கம் போனவர், அங்கேயும் யாவாரம் சூடு பிடிக்காததால் சென்னைக்கே திரும்பி விட்டார். இந்த முறை ஏராளமான போனஸ் அறிவிப்புகளோடு...
“சினிமாவில் ஹீரோயினாகதான் நடிப்பேன். அதுவும் நல்ல கதைகள் வந்தால் மட்டுமே அட்வான்ஸ் வாங்குவேன் என்றெல்லாம் அடம் பிடித்த அந்த பழைய சிந்தூரி காணாம போயிட்டா! இப்போ வந்திருக்கிற சிந்தூரியின் ஒரே நோக்கம் சினிமாவில் இருக்கணும். அது ஒரு பாடலா இருந்தாலும் சரி, ஒரேயடியா படத்தையே தாங்குகிற வெயிட்டான கேரக்டராக இருந்தாலும் சரி” என்கிறார் ஒரு முடிவோடு.
வாலிபால் என்றால் பந்து இருக்கணும். ஹாக்கி ஆட்டம் என்றால் மட்டை இருக்கணும் என்ற அடிப்படை கூட தெரியாதவரா சிந்தூரி? ஜிம்முக்கு போய் எக்ஸ்ட்ரா சதைகளை குறைத்திருக்கிறார். ‘தங்கத்தில் முகமெடுத்து, சந்தனத்தில் உடலெடுத்து’ ரேஞ்சில் கோடம்பாக்கத்தில் ரீ என்ட்ரி கொடுத்திருக்கும் சிந்தூரிக்கு எந்த டைரக்டர் பிள்ளையார் சுழி போடப் போகிறாரோ?