
சென்னையையடுத்த மீஞ்சூரில் கடந்த மூன்று தினங்களாக எந்திரன் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கிறது. நேற்று மாலை 4 மணிக்கு தனது வீட்டிலிருந்து படப்பிடிப்புக்கு கிளம்பினார் ரஜினி. மணலி அருகே சென்று கொண்டிருந்தபோது கடுமையான டிராபிக்ஜாம் ஏற்பட்டு ரஜினியின் கார் சிக்கிக் கொண்டது.
படப்பிடி்பபுக்கு தாமதமானதால் என்னசெய்வதென்று யோசித்த ரஜினி, அந்த வழியாக வந்த போக்குவரத்து போலீஸிடம் லிப்ட் கேட்டார். சூப்பர் ஸ்டாரை வைத்து பைக் சவாரிபோக யாருக்குத்தான் ஆசை வராது? போலீஸ்காரரும் 'நீங்கள் எனது பைக்கில் வர நான் கொடுத்துவைத்திருக்க வேண்டும்' என்றபடி ரஜினியை தனது பைக்கில் ஏற்றிக்கொண்டார்.
அடையாளம் தெரியாமல் இருப்பதற்காக போலீஸ்காரரின் மழை கோட்டையும், ஹெல்மெட்டையும் வாங்கி ரஜினிகாந்த் அணிந்து கொண்டார். பின்னர் மோட்டார் சைக்கிளில் பின்னால் ஏறி அமர்ந்தார். போலீஸ்காரர் மோட்டார் சைக்கிளை ஓட்டினார்.
ரஜினிகாந்த் ஒரு போலீஸ் காரரின் மோட்டார் சைக்கிளில் படப்பிடிப்புக்கு வருவதை அவருடைய உதவியாளர் செல்போன் மூலம் இயக்குனர்ஷங்கருக்கு தெரிவித்தார்.
ரஜினிகாந்த் சுமார் 20 கிலோ மீட்டர் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்து படப்பிடிப்பு தளத்தை அடைந்தார். அவர் மோட்டார் சைக்கிளில் வந்து இறங்கியதைப் பார்த்து இயக்குனர் ஷங்கர் உள்பட படப்பிடிப்பு குழுவினர் அனைவரும் ஆச்சரியப்பட்டார்கள்.
ரஜினிகாந்த் அணிந்திருந்த மழை கோட்டையும், ஹெல்மெட்டையும் கழற்றி கொடுத்துவிட்டு, போலீஸ்காரருக்கு நன்றி தெரிவித்தார். உங்கள் உதவியை மறக்க மாட்டேன் என்றார். உங்களை என் மோட்டார் சைக்கிளில் அழைத்து வந்ததில் எனக்கு சந்தோஷம் என்று போலீஸ்காரர் கூறினார். அவரிடம் விடைபெற்றுக்கொண்ட ரஜினி படப்பிடிப்பு தளத்துக்குள் நுழைந்தார்.
Nandri: Cinesouth
2 comments:
தங்கள் பதிவை www.newspaanai.com இல் சேர்த்து பலருடன் பகிர்ந்து கொள்ளுங்கள். www.newspaanai.com தமிழ் சோசியல் பூக்மர்கிங் சைட் நன்றி
வாழ்த்துக்கள்.
சினிமா பற்றிய வலை பார்க்கவும்.
நிறை / குறை கூறவும்.
Post a Comment